Advertisement

எதிர்கட்சிகள் வெளிநடப்பு pondy dis: assembly convened |Opposition parties walk out |Puducherry|

புதுச்சேரி 15-வது சட்டசபையின் 4-வது கூட்டத்தொடரின் 2-ம் பகுதியை இன்று காலை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார். மக்கள் பிரச்சனைகளை பேச சபையை கூடுதல் நாள் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் கூச்சல் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். விக்ரம் லேண்டர் விண்கல சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கும், புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு பெற்றுதந்த முதல்வர், கவர்னர், மத்திய அரசுக்கும் சபையில் நன்றி தெரிவிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்தும், அதுகுறித்தும் பேச நேரம் ஒதுக்காததற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபையில் முதல்வர் ரங்கசாமி பேசும் போது எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் அருகே சென்று விவாதிக்க கூடுதல் நேரம் ஒதுக்க கோரி முறையிட்டதால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement