Advertisement

விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற ராணுவ வீரர் | சக பயணிகள் அதிர்ச்சி | Delhi to Chennai flight

டில்லியில் இருந்து சென்னைக்கு செவ்வாய் இரவு 8:45 மணிக்கு இண்டிகோ விமானம் 154 பயணிகளுடன் புறப்பட்டது. ஓடு பாதையில் டேக் ஆஃப் ஆக துவங்கிய போது விமானத்தில் பயணித்த மணிகண்டன் என்ற ராணுவ வீரர் திடீரென அவசரகால கதவை திறக்க முயன்றார். இதை பார்த்த விமான ஊழியர்கள் அவரை எச்சரித்து தடுத்து நிறுத்தினர். இரவு 11.50 மணிக்கு விமானம் சென்னை வந்தது. தரை இறங்கியதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி மணிகண்டனை அழைத்து சென்றனர். அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரித்தனர். அவசர கால கதவு என தெரியாமல் திறந்து விட்டதாக மணிகண்டன் கூறினார். ஆனாலும் விமான பாதுகாப்பு சட்டப்படி அது குற்றம் என்பதால் அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement