Advertisement

குடியாத்தம் அருகே ஊருக்குள் வலம் வரும் ஒற்றை யானை, சிறுத்தை: பீதியில் மக்கள் | kathirkulam vellore

வேலுார் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமத்தில் 15 நாள் முன்பு ஒற்றை காட்டு யானை புகுந்தது. அதன் பிறகு தினமும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ராகவன் என்ற விவசாயி தனது வயலில் அறுவடை முடிந்து நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். அவற்றை யானை சேதப்படுத்தியது. அருகில் உள்ள இன்னொரு வயலில் புகுந்து கடலை, தக்காளி செடிகளை நாசம் செய்தது. யானையை உடனடியாக காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement