Advertisement

32 ஆண்டு வசிப்பிடங்களை காலி செய்ய வலியுறுத்துவதால் பரிதாபம் | Compassion for sri lankan refugees |Madurai

மதுரை மாவட்டத்தில் இடையப்பட்டி, ஆனையூர் மற்றும் உச்சப்பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இதில் 1990ம் ஆண்டு முதல் உச்சப்பட்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 32 ஆண்டுகளாக 490 குடும்பங்களை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசிக்கின்றனர். 490 குடும்பங்களுக்கும் முதல்வர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை தமிழர்கள் குடியிருப்பது வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடம் என்பதால் மாற்று இடத்தில் வீடு கட்டி தருகிறோம் என மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. வீடுகளை காலி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தமிழர்கள் கலெக்டர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். 32 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசிக்கும் தங்களின் வாழ்வாதாரம் கருதி அதே இடத்தில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement