Advertisement

தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை மீண்டும் கை விரிப்பு Cauvery water | karnataka | Tamilnadu | Supreme Court

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் நடந்தது. தமிழகம், கர்நாடக, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 24,000 கன அடி நீர் திறக்க வேண்டும் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகம் கேட்கும் தண்ணீரை திறக்க சாத்தியம் இல்லை என்றது கர்நாடகா. முக்கிய அணைகளில் 47 சதவீத தண்ணீர் மட்டுமே உள்ளது. பருவமழையும் போதிய அளவு பெய்யவில்லை. குடிநீர் தட்டுப்பாடும் உள்ளது என கர்நாடகா கைவிரித்தது. செப்டம்பர் 12 வரை தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், நீர் இருப்பு இல்லை எனக்கூறி கர்நாடக அதிகாரிகள் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டனர். காவிரி நீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இச்சூழலில், காவிரி ஆணையத்தில் நடந்த விவாதங்களின் விபரங்களை தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யும் எனத்தெரிகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement