Advertisement

அனுமதி பெறாத கட்டடத்தில் தீ விபத்து: போலீசார் விசாரணை

திருச்சி திருவெறும்பூர் மலைக்கோவில் பகுதியில் பிரபல ஸ்வீட் கடையுடன் கூடிய உணவகம் செயல்படுகிறது. இங்கு நள்ளிரவு சமையல் பகுதியில் திடீரென்று தீ பிடித்தது. தகவல் தெரிவித்து ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் வந்த நவல்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கடையில் இருந்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. விசாரணையில் கட்டடம் கட்டுவதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்பதும், தீ தடுப்பு சாதனங்கள் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. திருவெறும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement