Advertisement

அரசு நிலத்தில் 3 மாடி கட்டிடம் மின் இணைப்பிற்கு தடையில்லா சான்று

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்காவில் , அரசுக்கு சொந்தமான நத்தம் பிரிவு நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தில், வீடில்லாத ஏழைகள் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு, வீடு கட்டவும், மின் இணைப்பு பெறவும் வருவாய்த்துறை தடையில்லா சான்று வழங்கப்படும். ஆனால் பந்தலூர் அருகே சேரம்பாடி பஜாரில், கேசவன் என்பவரின் மனைவி ரேணுகாதேவி என்பவர் பெயரில் வழங்கப்பட்ட இடத்தில் மூன்று மாடி கட்டிடம் உள்ளது. தரை தளத்தில் ரேஷன்கடை உள்ளிட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மேல் தளங்கள் தனியார் ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு பெற கடந்த 2020 ம் ஆண்டு வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர் பரிந்துரையின் பேரில்,, அப்போதைய தாசில்தார் மின் இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கினார். நத்தம் பிரிவு நிலத்தில் கட்டியுள்ள 3 மாடி கட்டிடத்திற்கு விதிமீறி மின் இணைப்பு கொடுக்க சான்று வழங்கியது தவறு என்ற புகாரை தொடர்ந்து, வழங்கப்பட்ட தடையில்லா சான்று ரத்து செய்யப்பட்டது. அரசு விதி மீறி வாடகைக்கு விடப்பட்ட கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க தடையில்லா சான்று வழங்கியதும், மின் இணைப்பு வழங்கியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement