Advertisement

ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மோதல் 30 டூவீலர்கள் சேதம், 4 பேர் காயம்

மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா நடைபெறுகிறது. நேற்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆடல் பாடல் நிகழ்ச்சியை மறைத்துபடி ஒரு தரப்பினர் ஆட்டம் போட்டனர். மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவி்த்தனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் மோதலாக மாறி நிகழ்ச்சி நடந்த இடம் கலவரமாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். நொண்டிகோயில் தெருவுக்குள் புகுந்த கும்பல் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்குகள் மற்றும் ஓட்டு வீடுகளை சூரையாடியது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement