Advertisement

சாராயம் காய்ச்சியவர் நாமக்கல்லில் கைது

நாமக்கல் மாவட்டம், கெடமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நாமக்கல் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையில் போலீசார் கெடமலையில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது கண்டு கெடமலையை சேர்ந்த வெள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் மற்றும் 300 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர். சாராயம் காய்ச்ச பயன்படுத்திய உபகரணங்களை அழித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement