Advertisement

கவனிப்பில்லாத முதுமை சொல்லும் உருக்கமான கதை

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் முதுமை கட்டாயம் வரும். அந்த கால கட்டத்தில் துணை வேண்டும். அதை விட முக்கியம் பொருளாதார துணை. அது இல்லாவிட்டால் முதுமை வாழ்க்கை நரகமாகி விடும். குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்க்கும் பெற்றோர் அவர்களுடைய கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாமல் இருப்பார்கள். பிள்ளைகள் வெளிநாடுகளிலோ, வெளியூர்களிலோ வேலை பார்க்கும்போது பெற்றோரை பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். அந்த நிலையில் பெற்றோரை முதியோர் காப்பகத்தில் எந்த குறையும் இன்றி அதிக கட்டணம் செலுத்தி தங்க வைத்திருப்பார்கள். இருந்தாலும் அத்தகைய பெற்றோர் எதையோ இழந்ததை போலத் தான் வாழ்ந்து வருவார்கள். ஒரு பக்கம் வசதியானவர்கள் தான் இத்தகைய துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்றால், மற்றொரு பக்கம் வசதி இல்லாதவர்களும், சொத்துக்களை பிள்ளைகளிடம் பறிகொடுத்தவர்களும் இதே துன்பத்தை அனுபவிப்பார்கள். வயதான காலத்தில் தங்களை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாமல் முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் உருக்கமான கதைகளை விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement