Advertisement

காற்றில் பறந்த பஸ் கூரை | அலறியபடி இறங்கிய பயணிகள் | Thiruvallur Bus | Bus Top

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் முதல் பழவேற்காடு வரை 558B டவுன் பஸ் இயக்கப்படுகிறது. செவ்வாயன்று மதியம் செங்குன்றத்தில் இருந்து பொன்னேரி வழியாக பழவேற்காடு சென்றது. பிரளயம்பாக்கம் அருகே வந்தபோது மழை வெளுத்து வாங்கியது. மழையுடன் லேசான காற்று அடித்ததில் பஸ் கூரை உரிந்து பறந்தது. பஸ்சில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் அலறியபடி இறங்கினர். மழையில் நனைந்தவாறே காத்திருந்து வேறு பஸ்சில் ஏறி ஊருக்கு சென்றனர். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த கண்டக்டர் அதிகாரிகளுக்கு தகவல் சொன்னார். கூரை உரிந்த பஸ் பார்க்க புதுசு போல இருந்தாலும் முறையான பராமரிப்பு இல்லை. தரமற்ற முறையில் பஸ் கூண்டு கட்டினால் இது போல நடக்கும் என்கின்றனர் ஆர்வலர்கள்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement