Advertisement

ஆண் துணையின்றி 200 பெண்கள் ஹஜ் யாத்திரை புறப்பட்டனர் | Modi | Haj pilgrimage without mahram

45 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் யாத்திரை செல்ல 2018 ல் மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் குறைந்தபட்சம் 4 பெண்கள் சேர்ந்து ஒரு குழுவாக சென்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இத்திட்டத்தின் கீழ், இந்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல 4 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். வட இந்தியாவைச் சேர்ந்த 200 பெண்கள் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹஜ் யாத்திரை புறப்பட்டனர். அவர்களை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி, டில்லி ஹஜ் கமிட்டி தலைவர் கவுசர் ஜஹான் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். பெண்ணுரிமை விஷயத்தில் மோடி அரசின் மிகப்பெரிய சாதனை இது என, மீனாட்சி லேகி, கவுசர் ஜஹான் கூறினர். யாத்திரை செல்லும் பெண்களுடன் இருவரும் உரையாடினர். அப்போது, மோடி சிறந்த முறையில் ஆட்சி செய்வதாக முஸ்லிம் பெண்கள் கூறினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement