Advertisement

சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை புல்லரிக்க வைக்கும் வீடியோ | CSK | MS Dhoni | Dinamalar

5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் வந்தவண்ணம் உள்ளது. சிஎஸ்கே மீம்ஸ்களை போட்டு ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். MSDhoni ேஹஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. புதுச்சேரியில் கியூபா எனப்படும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பள்ளி நடத்தி வரும் நீச்சல் வீரர் அரவிந்தன் தன் பங்குக்கு கடலுக்குள் கிரிக்கெட் விளையாடி சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கும் நீலாங்கரைக்கும் இடையில் உள்ள கடலில் 60 அடி ஆழத்தில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஸ்கூபா நீச்சல் பயிற்சி பள்ளியை சேர்ந்த 2 வீரர்களுடன் அரவிந்தன் கடலுக்குள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சிஎஸ்கே ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ளது. ஒருவர் பவுலிங், ஒருவர் பேட்டிங், ஒருவர் கீப்பிங் என நீச்சல் வீரர்கள் கலக்கியுள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement