Advertisement

பெண்ணை சீண்டிய இளைஞர் போலீசில் ஒப்படைப்பு | Trippur | Bus Harrasement

திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் வயது 31. மனைவி ஹேமாவுடன் கேரளாவில் நடந்த விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து பொள்ளாச்சி திரும்பிய தம்பதி, அங்கிருந்து திருப்பூர் பஸ்சில் சென்றுகொண்டிருந்தனர். பின் சீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் ஹேமாவை சீண்டினார். முதல் தடவை அவர் முறைத்து எச்சரித்தார். ஆனாலும் அடங்காத அந்த இளைஞர் தொடர்ந்து கை, கால்களால் சீண்டி சில்மிஷம் செய்தார். டென்ஷனான ஹேமா கணவரிடம் சொன்னதுடன், கண்டக்டரை அழைத்து சத்தம் போட்டார். ஹேமாவின் கணவரும், சக பயணிகளும் அந்த இளைஞரை பிடித்து தாக்கினர். திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் வந்ததும் கண்டக்டர் அந்த இளைஞரை போலீசில் ஒப்படைத்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement