Advertisement

தமிழக அரசு உதவியுடன் சிகரத்தில் ஏறி சாதித்தார்! | Everest | Dinamalar

விருதுநகர் மாவட்டம் ஜோயல்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. வயது 34. திருமணமாகி தற்போது சென்னையில் வசிக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜப்பான் மொழி பயிற்றுனராக வேலை செய்கிறார். வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டுமென தீராத தாகம் கொண்டவர் முத்தமிழ்ச்செல்வி. இதனால் உயரிய மலைசிகரங்களில் ஏறி பயிற்சி பெற்றார். வில்வித்தையிலும் பல பதக்கங்கள் பெற்றுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்தார். பொருளாதார வசதி இல்லாததால் அவரது பயணம் தடை பட்டது. கடைசியில் தமிழக அரசு அவருக்கு நிதியுதவி அளித்தது. இதனால் மே 23ம் தேதி அவர், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். எவரெஸ்டில் ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையையும் முத்தமிழ்ச்செல்வி பெற்றார். பயணத்தை முடித்து கொண்டு, சென்னை விமானநிலையம் திரும்பிய அவருக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement