Advertisement

தந்தையை கொலை செய்த மகள் அக்காவை அடித்து கொன்ற தம்பி

இராமநாதபுரம் காவனூர் ஆசாரி மடத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பவித்ரா தாய் பாக்கியத்தின் உதவியுடன் இடையர் வலசையைச் சேர்ந்த டிரைவர் ஒருவருடன் பழகி வந்தார். பவித்ராவின் தந்தை ரவி கண்டித்ததார். ஆத்திரம் அடைந்த பவித்ராவும், பாக்கியமும் சேர்ந்து கடந்தாண்டு மார்ச் மாதம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த ரவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனர். கொலை வழக்கில் இருவரும் ஜாமினில் வந்தனர். குழந்தைகள் இருவரும் ரவி கொலை செய்யப்பட்ட வீட்டில் இருந்தனர். கொத்தனார் ஒருவருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. ரவியை கொலை செய்ததில் உறவினர்கள் கோபத்தில் இருந்தனர். பவித்ராவின் சித்தப்பா முருகன், மகன் மணி, உறவினர் அஜய் மூவரும் பவித்ரா வீட்டில் இருந்த போது ராடு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்தனர். அருகில் இருந்தவர்கள் மணியை பிடித்து பஜார் போலீசிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய முருகன், அஜய் இருவரையும் தேடுகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement