Advertisement

மனநலம் பாதித்தவரை கொடூரமாக தாக்கிய போலீஸ்

திருச்சி மாவட்டம் மணப்பாறை விடத்திலாம்பட்டி ஆனையூரை சேர்ந்தவர் யோகஸ்வரன் வயது 22. மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று இரவு மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நி்கழ்ச்சியினை யோகேஸ்வரன் மேடையருகே நின்று பார்த்து கொண்டு இருந்தார். மேடை அருகே நிற்க கூடாது என போலீசார் எச்சரித்தனர். யோகேஸ்வரன் கண்டு கொள்ளாமல் ஆட்டத்தை ரசித்து கொண்டு இருந்தார். போலீசார் லத்தியால் தாக்கினர். இதில், மூக்கு நெற்றியில் காயமடைந்து ரத்தம் கொட்டியது. உறவினர்கள் மணப்பாறை அரசு ஆஸ்பிடலில் அனுப்பி வைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement