Advertisement

வாழ்வை உயர்த்திய ஆசிரியரை கவுரவித்த மாணவர்கள்

பாடம் கற்பித்து கொடுத்த ஆசிரியர்களை, டிசி வாங்கிவிட்டு வெளியில் வந்தாலே மறந்து போகுபவர்கள் நிறைய பேர். ஆனால் இரண்டு தலைமுறைகளுக்கு பாடம் கற்பித்த ஆசிரியரை கோடை விடுமுறையில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளனர் ஒரு குடும்பத்தினர். நீலகிரி மாவட்டம் சேலக்குன்னாவை சேர்ந்தவர்கள் கார்த்திக், சதீஷ், காயத்ரி. சகோதரர்களான இவர்கள், சேலக்குன்னா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்தார்கள். தற்போது கார்த்திக் மட்டுமே உள்ளூரில் வசிக்கும் நிலையில், இவரின் குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். மற்ற இரு சகோதரர்களும் கோவையில் குடியிருந்து வரும் நிலையில், கோடை விடுமுறையில் சேலக்குன்னா வந்தனர். 3 பேரும் தங்கள் குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்று, பாடம் சொல்லி கொடுத்த தலைமையாசிரியர் சுந்தரலிங்கம், ஆசிரியர் ஐயப்பன் ஆகியோருக்கு பழங்கள், புத்தாடைகளுடன் சீர் வழங்கி, சால்வை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். அரசு பள்ளியில் படித்ததால் தாங்கள் உயர்வான நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர்.இந்த செயல் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement