Advertisement

கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் இளைஞர்கள் உற்சாகம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட ஏ- கஸ்பா பகுதியில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் வைகாசி திருவிழாவையொட்டி எருது விடும் விழா நடந்தது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. உரிய பரிசோதனைக்கு பிறகே காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இலக்கை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 80 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 60 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. எருது விடும் விழாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement