Advertisement

அக்னிதோஷ நிவர்த்தி அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த மொரட்டாண்டி பகுதியில் உலகிலேயே மிக உயரமான மொரட்டாண்டி மகா பிரத்தியங்கரா காளி கோயில் உள்ளது. இங்கு வருடம் தோறும் அக்கினி வெயில் நிறைவையொட்டி அக்னிதோஷ நிவர்த்தி அபிஷேகம் நடைபெறும். அதன்படி இந்த வருடமும் பிரத்தியங்கிரா காளிக்கு 24 மணி நேர பிரம்மாண்ட அபிஷேகம் நடந்தது. ஆலய பீடாதிபதி நடாத்தூர் ஜனார்த்தன சுவாமிகள் தலைமையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு துவங்கிய அபிஷேகம் இன்று காலை 7 மணிக்கு நிறைவடைந்தது. 1008 லிட்டர் தயிர், பால், நெய், மற்றும் 1008 இளநீர், நுங்கு மற்றும் 108 கிலோ, மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் உட்பட 108 பொருட்களைக் கொண்டு இடைவிடாது அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காளிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டால் மக்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement