Advertisement

மேளதாளம் முழங்க உலா வந்த மூர்த்திகள்

தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 20ம் தேதி அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நேற்று இரவு நடந்தது. விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேததராய் மயில் வாகனத்திலும், சோமாஸ்கந்தர் பெரிய விருட்சப வாகனத்திலும், பெரியநாயகி அம்பிகை தனியாக சிறிய விருட்சப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் சுவாமிக்கு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது. மேளதாளம் முழங்க சுவாமி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement