Advertisement

டூவீலர் - லாரி மோதி விபத்து தாத்தா, பேரன் பரிதாப பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்தவர் சீனிவாசன். மகன் கார்த்திக் வயது 14. இவரது தாத்தா வெங்கடாசலம் வயது 80. கரூர் மாவட்டம் பெத்தான் கோட்டையைச் சேர்ந்தவர். தாத்தாவும், பேரனும் டிவிஎஸ் 50 டுவீலரில் பெத்தான் கோட்டை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர். பின்னால் டாரஸ் லாரி தூத்துக்குடியிலிருந்து பள்ளிபாளையத்தில் உள்ள பேப்பர் மில்லுக்கு சுண்ணாம்பு பவுடர் ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது கார்த்தி டூ வீலரை திடீரென வலதுபுறம் திருப்பினார். இதில் பின்னால் வந்த லாரி பலமாக மோதியது. இதில் தாத்தாவும் பேரனும் பரிதாபமாக பலியாகினர். அரவக்குறிச்சி போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement