Advertisement

அமெரிக்க பயணம் குறித்து மூத்த நிர்வாகிகள் கவலை | Ragul | Congress

பிரதமர் மோடியை அவதுாறாக பேசிய வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. சிறப்பு பாஸ்போர்ட்டை ராகுல் ஒப்படைத்தார். அதன் பின் அமெரிக்கா செல்ல திட்டமிட்ட ராகுல் சாதாரண பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தார். ராகுலுக்கு 3 ஆண்டுகள் சாதாரண பாஸ்போர்ட் வழங்க தடையில்லா சான்று அளித்து டில்லி கோர்ட் உத்தரவிட்டது. நேற்று புதிய பாஸ்போர்ட் பெற்றார். இன்று முதல் ஒரு வாரம் அமெரிக்கா பயணம் செல்லும் ராகுல் பல நிகழ்ச்சிகளில் பேச உள்ளார். ஏற்கனவே பிரிட்டனில் உள்நாட்டு அரசியல் பிரச்னைகள் பற்றி ராகுல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லோக் சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை மீண்டும் பேசி பின்னடைவை ஏற்படுத்தி விடுவாரோ என காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement