Advertisement

பார்லிமென்டில் முத்தாய்ப்பாய் தமிழக செங்கோல் | New parliment | Modi | Sengoal

புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், மர வேலைப்பாடுகளை பயன்படுத்தப்பட்ட மரங்கள் மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு வரப்பட்டன. இங்கு பயன்படுத்தப்பட்ட கிரானைட் கற்கள், மார்பில்கள் ராஜஸ்தானை சேர்ந்தவை. தரை விரிப்புகள், உத்தர பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டவை. பார்லிமென்ட் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட எம்-சாண்டு ஹரியானாவில் இருந்து கொண்டுவரப்பட்டது. நிறுவப்பட்டுள்ள உலோக கலை பொருட்கள் குஜராத்தை சேர்ந்தவை. எம்பிக்கள் அமர்வதற்கான மர நாற்காலிகள் மும்பையில் செய்யப்பட்டவை. லோக்சபா, ராஜ்ய சபா வளாகத்தில் உள்ள தூண்கள் வடிவமைப்பதற்கான பொருட்கள், டாமன், தாத்ரா ஹவேலி யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவை. பார்லிமென்ட் வளாகம் முழுதும் பல மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் கலை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, லோக்சபா தலைவர் இருக்கைக்கு அருகே தமிழகத்தின் ராஜ பாரம்பரியம், கலாச்சாரத்தை உணர்த்தும் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement