Advertisement

லாரி கார் மோதல் 3 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாகைக்குடியை சேர்ந்தவர் கணேசன் வயது 39. கரூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். சொந்த ஊருக்கு கரூரில் இருந்து மகள் அபிநயா வயது 6, மனைவியின் அக்கா மகள் சரிதா வயது 16 ஆகியோருடன் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவகோட்டை நோக்கி சென்றார். சங்கரபதி கோட்டை அருகே எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. கணேசன், அபிநயா, சரிதா, மூவரும் இறந்தனர். காரைக்குடி தீயணைப்புத்துறை மூவரின் உடல்களை மீட்டனர். சோமநாதபுரம் போலீசார் விசாரி்க்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement