Advertisement

41 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணாக்கியதால் சஸ்பெண்ட் ஆனார் | Chhattisgarh | Dinamalar

சட்டீஸ்கர் மாநிலத்தில் Kanker கான்கெர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். கடந்த 22ம்தேதி அங்குள்ள அணைக்கு நண்பர்களுடன் சென்றார். செல்பி எடுத்தபோது ராஜேஷின் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன் அணையில் தவறி விழுந்தது. உடனே கிராம மக்கள் சிலரை அழைத்து அணையில் குதித்து செல்போனை கண்டுபிடிக்க சொன்னார். அவர்களும் தேடினர். போன் கிடைக்கவில்லை. நீர்பாசனத்துறை அதிகாரியை சந்தித்த ராஜேஷ், செல்போனில் அரசு ஆவணங்கள் இருப்பதால் போனை மீட்டாக வேண்டும் என கூறி, அணைநீரை வெளியேற்ற அனுமதி வாங்கினார். 2 மோட்டார்களை 3 நாட்களுக்கு தொடர்ந்து இயக்கி அணையிலிருந்து தண்ணீரை வெளியேற்றினார். 41 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது. அணை காலியானது. போன் கிடைத்தது. ஆனாலும், அது வேலை செய்யவில்லை. வீணாக்கப்பட்ட தண்ணீர் 1500 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் செய்ய போதுமானது என்பதால் விவசாயிகள் கொந்தளித்தனர். பெரும் சர்ச்சை உண்டானது. இதையடுத்து ராஜேஷ் விஸ்வாஸை பணியிட நீக்கம் செய்து காங்கேர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா சுக்லா உத்தரவிட்டார். இத்தனைக்குப்பிறகும் ராஜேஷ் அடங்கவில்லை. வெளியேற்றப்பட்ட தண்ணீர் விவசாயத்துக்கு உகந்தது அல்ல என்கிறார். அணையிலிருந்து நீரை வெளியேற்ற அனுமதி வழங்கிய நீர்ப்பாசனத் துறை அதிகாரி ஆர்.சி.திவாகருக்கும் கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement