Advertisement

மோடி ஆட்சி திருப்தி என 73 சதவீதம் பேர் கருத்து | Modi | Dinamalar

மத்தியில் பாஜக ஆட்சியமைத்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜ தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்தாண்டு பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த பார்லிமென்ட் தேர்தலில் யார் பிரதமராக வருவார் என ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டுமென 49 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ராகுலுக்கு 18 சதவீதம் பேரும் யோகி ஆதித்யநாத்துக்கு 6 சதவீதம் பேரும் கெஜ்ரிவாலுக்கு 5 சதவீதம் பேரும், மம்தாவுக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவளித்துள்ளனர். பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி மிகவும் திருப்திகரமாக இருப்பதாக 73.02 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 62.05 சதவீதம் பேர் மிகவும் திருப்தி என கூறியிருந்தனர். மேலும், ஐந்தில் 3 இந்தியர்கள், பிரதமர் மோடி முக்கிய முடிவுகளை துணிச்சலுடன் எடுப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்,

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement