Advertisement

பறவைகள் கணக்கெடுப்பு கல்லூரி மாணவர்கள் ஆர்வம்

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் விலங்கியல் துறையின் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வீரபாகு, விலங்கியல் துறைத் தலைவர் ராதிகா துவக்கி வைத்தனர். அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ராஜேஷ் மாணவர்களுக்கு பறவைக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் பற்றியும், பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருக்கும் என விளக்கினார். மாணவர்களால் மயில், இரட்டை வால் குருவி, கிருஷ்ண பருந்து, நீர் காக்கை, முனியா, நீளவால் நீர்பிடிப்பான், கொக்கு, பனங்காடி, கிளி உள்ளிட்ட 25 பறவைகள் கல்லூரி வளாகத்தில் கணக்கெடுக்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement