Advertisement

லாரி மோதி இருவர் பலி

பெரம்பலுார் மாவட்டம், பென்னங்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் துரை, 42. இவரது மனைவி மகேஸ்வரி மற்றும் குழந்தைகள், தொழுதுாரில் வசித்து வந்தனர். நேற்று மாலை துரை தன் பைக்கில், அவரது மைத்துனர் மாரியப்பனின் மகள் தேவஸ்ரீ, 4, பக்கத்து வீட்டு சிறுமி ஷர்மிதா, 8, ஆகியோருடன் கடைக்கு செல்ல தொழுதுார் - ஆத்துார் சாலையில் சென்றார். அப்போது, மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் துரை, தேவஸ்ரீ தலையில் அடிபட்டு இறந்தனர். படுகாயமடைந்த ஷர்மிதா, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement