Advertisement

சுற்றுலா விவகாரம் பழனிசாமிக்கு அழகிரி பதிலடி

தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், 9 நாட்கள், அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனை கொச்சைப்படுத்தும் வகையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சனம் செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பத்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் தேசிய அளவில் நாட்டிற்கு வந்த மொத்த முதலீடுகளில் தமிழகத்திற்கு வந்தது வெறும், 0.79 சதவீதம் தான். அ.தி.மு.க., ஆட்சியில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட பல நிறுவனங்கள், 'முதலீட்டிற்கு உகந்த மாநிலம் தமிழகம் இல்லை' எனக்கூறி, வேறு, வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டதை எவரும் மறுக்க முடியாது. இதற்கு காரணம், அ.தி.மு.க., ஆட்சியில் நிலவிய ஊழலும், நிர்வாக சீர்கேடும் தான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement