Advertisement

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

தமிழகத்தில் பள்ளிகள் 6 முதல் 12 ம் வகுப்புகள் ஜூன் 1 ந் தேதியும், 1 முதல் 5 ம் வகுப்புகள் ஜூன் 5 ந்தேதியும் திறக்கப்படவுள்ளது. பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி உள்ளிட்டவை குறித்து மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் SP சிவ பிரசாத், சிஇஓ கார்த்திகா, அதிகாரிகள், ஆர்டிஓ, தீயணைப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். 5 நாட்களில் 276 பள்ளிகளை சேர்ந்த 1,272 வாகனங்கள் சோதனை செய்யப்பட உள்ளது. வாகன டிரைவர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்தும், மாவட்ட நிர்வாகம் சார்பில் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளவது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement