Advertisement

கண்டெய்னர் லாரி விபத்து 30 பேர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாடசாமி (34). டிரைவர். சென்னையில் கார் உதிரி பாகங்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் நோக்கி சென்றார். காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி எதிர் திசையில் சென்னை நோக்கி வந்த தனியார் ஆலை பேருந்து, கார் மீது அடுத்தடுத்து மோதியது. விபத்தில் லாரி ஓட்டுநர் மாடசாமி, தனியார் ஆலை ஊழியர்கள், காரில் வந்தவர்கள் என சுமார் 30 பேர் படுகாயம் அடைந்தனர். ஸ்ரீபெரும்பதூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தண்டலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement