Advertisement

போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது | Tasmac Seal | Dinamalar

தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் விற்கப்பட்ட மதுவை வாங்கி குடித்த இருவர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அனுமதி பெறாமல் இயங்கும் பார்களை கண்டறிந்து போலீசார் சீல் வைக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் இயங்கிய 30 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் இயங்கும் எஞ்சிய பார்களுக்கும் சீல் வைக்கப்படும் என மாவட்ட எஸ்பி தங்கதுரை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 89 பார்கள் லைசென்ஸ் இன்றி இயங்குவது விசாரணையில் தெரிந்தது. முதல் கட்டமாக, 20 பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 71 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement