Advertisement

கிரிக்கெட் மைதானத்தில் புகுந்த 8 அடி பாம்பு

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட 15 இடங்களில் 2 வாரம் தொடர்ந்து நடக்கிறது. இன்று பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியை பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி துவங்கி வைத்தார், சிறப்பு அழைப்பாளர்கள் பலரும் விழா மேடையில் இருந்து கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மைதானத்திற்குள் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற நந்தகுமார் மைதானத்தில் நுழைந்த 8 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்தது வனப்பகுதியில் விட்டார்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement