Advertisement

விளையாட்டு விடுதி சேர்க்கை தேர்வு ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவர்களுக்கு மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்படுகிறது. இவ்விடுதிகளில் சேர, ஆண்டுதோறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவர். இந்தாண்டுக்கான தேர்வு காளப்பட்டியில் உள்ள என்.ஜி.பி., கல்லுாரியில் இன்று நடந்தது. விளையாட்டு விடுதிகளில் சேர 125 பேர் பதிவு செய்திருந்தனர். 111 பேர் தேர்வில் பங்கேற்றனர். தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, ஜூம்னாஸ்டிக், ஹேண்ட்பால், ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், கபடி, டேபிள் டென்னிஸ்,கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தேர்வு நடந்தது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement