Advertisement

கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி திருச்செங்கோட்டில் எரிந்ததது

ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருச்செங்கோட்டிற்கு கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி, திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே டயர் வெடித்து தீப்பற்றி எரிந்தது. பரபரப்பாக மக்கள் நடமாடும் பகுதியில் திடீரென லாரி எரிந்ததால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். லாரி உரிமையாளர் ராமச்சந்திர நாயுடு, டிரைவர் சரவணன் 45 இருவரும் கீழே குதித்து உயிர் தப்பினர். லாரிக்கு பின்னால் வந்த டூவீலரும் தீப்பிடித்தது. டூவிலரில் வந்த பால் மடை பகுதியை சேர்ந்த நரசிம்மா 55 மற்றும் அவரது மனைவி சரஸ்வதி இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் ஒரு மணி நேரம் பஸ் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement