Advertisement

ஊட்டிக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் தவிப்பு

பள்ளிகள் விடுமுறையாலும், கோடை வெயில் தாக்கத்தாலும் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் ஊட்டி மற்றும் கோத்தகிரிக்கு செல்கின்றனர். கோவையில் இருந்து அரசு பஸ் ஊட்டிக்கு செல்கிறது போதிய பஸ்கள் இல்லாததால் ஊட்டிக்கு செல்ல முடியாமல் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தவிக்கின்றனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, அரை மணி நேரத்திற்கு ஒரு அரசு பஸ் இயக்குவதாக கூறுகின்றனர். ஆனால் மக்கள், ஒரு மணி நேரமாக நின்று கொண்டு உள்ளோம்.பஸ் வரவில்லை எனக் கூறுகின்றனர். இதனால் பஸ் வந்தவுடன் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறுவது வாடிக்கையாகி வருகிறது. உதகைக்கு கூடுதல் பஸ்களை இயக்க மக்கள் அரசுகுஅகு கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement