Advertisement

கழுத்தில் காயத்துடன் கிடந்ததால் விசாரணை

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் அட்டைப்பெட்டியில் பிறந்து ஒரு நாள் ஆன ஆண் குழந்தை கழுத்து, தலையில் காயத்துடன் இறந்து கிடந்தது. மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக திண்டுக்கல் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் யார் குழந்தை என கண்டுபிடிப்பதற்காக டி.என்.ஏ பரிசோதனைக்கு குழந்தையின் உடலை அனுப்பினர். புதிய கட்டடத்தில் சிசிடி கேமரா இல்லாததால் குற்றவாளியை கண்டு பிடிப்பதில் போலீசார் திணறுகின்றனர். தொடர் விசாரணை நடக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement