Advertisement

19 மாதங்களுக்கு பின் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை

திமுக ஆட்சிக்கு வந்தபின், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். முன்னாள் சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதியப்பட்டது. உயர்கல்வி அமைச்சராக இருந்த கேபி அன்பழகன், வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதியப்பட்டது. 19 மாதங்களுக்கு பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த இரண்டு வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். புதுக்கோட்டை குற்றவியல் கோர்ட்டில் விஜயபாஸ்கருக்கு எதிராக 216 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். தருமபுரி குற்றவியல் கோர்ட்டில் அன்பழகனுக்கு எதிராக 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement