Advertisement

தமிழில் டுவீட் போட்டு பிரதமர் மோடி பெருமிதம் | PMModi | Kural | PapuaNewGuinea

பிரதமர் மோடி ஜப்பான் பயணத்தை முடித்து பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு சென்றார். அந்த நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மாரோப், பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கி வரவேற்றார். பப்புவா நியூ கினியாவில் ‛டோக் பிசின்' மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை மோடி வெளியிட்டார். பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவுக்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு. இது பல துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. குறளை டோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் கவர்னர் மற்றும் சுபா சசீந்திரனை பாராட்டுகிறேன். கவர்னர் சசீந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்றுள்ளார். திருமதி சுபா சசிந்திரன் சிறந்த பன்மொழி அறிஞர் எனவும் பிரதமர் தமிழில் பதிவிட்டு உள்ளார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement