Advertisement

அவிநாசி பகுதிகளில் ஆலங்கட்டி மழை

அவிநாசி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் நிலவியதால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் நேற்று பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். இன்று பிற்பகல் கனமழை பெய்தது. இதில்,அவிநாசி, ஆட்டையம்பாளையம், காசிகவுண்டன்புதூர், மடத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் ஆழங்கட்டி மழையும் பெய்தது. மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement