Advertisement

பர்த்டே கேக் வெட்ட பட்டா கத்தி... மதுரை திமுக அமைப்பாளர் ஓட்டம்... DMK | Atrocities

மதுரை செல்லுாரை சேர்ந்த செல்வம் மகன் முத்துமணி வயது 35. திமுக மாநகர் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர். சமீபத்தில் இவருக்கு பிறந்த நாள் வந்தது. ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்தனர். விளம்பர பலகை வைத்தனர். திருமண மண்டபம் ஒன்றில் தடபுடலாக பிறந்த நாள் கொண்டாடினார் முத்துமணி. நண்பர்கள் பட்டா கத்தியை பரிசளித்தனர். அதை வைத்து கேக் வெட்டிய முத்துமணி, பட்டா கத்தியுடன் ஆக்ரோஷமாக போட்டோ, வீடியாவுக்கு போஸ் கொடுத்தார். சோசியல் மீடியாவில் வீடியோ வந்தது. செல்லுார் போலீஸ் கவனத்துக்கு போனது. முத்துமணி மீது வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement