Advertisement

கோவை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

ஜூன் மாதம் 1 ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 56 பள்ளிகளில் இயங்கி வரும் 393 பள்ளி பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர் . தொடர்ந்து பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு விஷயங்கள் குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் அளித்தனர். -- அதேபோல் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை தாலுகாவில் உள்ள 66 தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் 374 பள்ளி வாகனங்களில் 300 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் 30க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் முறையாக பாதுகாப்பு வசதி இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement