Advertisement

துணைமுதல்வர் ஆனார் சிவகுமார் | 8 அமைச்சர்கள் பொறுப்பேற்பு | Karnataka | Congress

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது. முதல்வர் ஆவதில் சித்தராமய்யா, சிவகுமார் இடையே போட்டி இருந்தது. நீண்ட இழுபறிக்கு பின் சித்தராமய்யாவை முதல்வராக காங்கிரஸ் அறிவித்தது. பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் சித்தராமய்யா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் தவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக சிவகுமாரும், அமைச்சர்களாக 8 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், பிரியங்கா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பங்கேற்றனர். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, நடிகர் கமல் உள்ளிட்டோரும் கலந்து கொண்றனர். அமைச்சரவையில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், லிங்காயத், ரெட்டி, கிறித்தவர், முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பரமேஸ்வரா, முனியப்பா ஆகியோர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அமைச்சர் சதிஷ் ஜார்கிஹோலி பழங்குடியினத்தை சேர்ந்தவர். லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பாட்டில், ரெட்டி சமூகத்தை சேர்ந்த ராமலிங்க ரெட்டிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. கிறிஸ்தவரான கேஜே.ஜார்ஜ், முஸ்லிமான ஜமீர் அஹமது கான் அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளனர். மல்லிகார்ஜுன கார்க்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement