Advertisement

இனி தரமற்ற உணவு விற்றால் தப்ப முடியாது

உணவு பொருட்களின் தரத்தை உடனடியாக பரிசோதிக்கும் நடமாடும் ஆய்வக வாகனத்தை தமிழக உணவு பாதுகாப்புத்துறை உருவாக்கியுள்ளது. மாவட்டத்துக்கு ஒன்று வீதம் நடமாடும் ஆய்வக வாகனம் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூருக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். பால், கூல் டிரிங்க்ஸ், மசாலா பொருட்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உள்ளிட்ட உணவு பொருட்களை உடனடியாக பரிசோதித்து, அவற்றின் தரம் குறித்து அறிக்கை அளிக்கும் நவீன கருவிகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளp. மாவட்டம் முழுவதும் இந்த நடமாடும் ஆய்வக வாகனம் ரோந்து செல்லும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தப்படும். பொதுமக்கள் கலப்படமாக இருக்கலாம் என சந்தேகிக்கும் குளிர்பானம், மசாலா உள்பட அனைத்து உணவு பொருட்களையும் இந்த வாகனத்தில் வழங்கி இலவசமாக பரிசோதித்துக் கொள்ளலாம். உடனடியாக உணவு பொருட்களின் தரம் மற்றும் ஆய்வு விவரத்தை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் கலப்பட உணவு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கையை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எடுப்பார்கள். இந்த வாகனத்தில் உணவு பொருள் கலப்படம் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து வீடியோ காட்சிகள் மூலம் உணவு பாதுகாப்புத்துறை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement