Advertisement

விமான பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் போலீசார் சோதனையில் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். திருச்சி பயணிகள் விமானத்தில் ஏற வந்தவரிடம் சோதனை செய்தனர். சென்னையை சேர்ந்த ராஜ்குமார் 50 என்பவரிடம் லைசென்ஸ் பையில் லைசென்ஸ் துப்பாக்கி குண்டுகள் 5 இருந்தது. பாதுகாப்பு போலீசார் அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான பயணத்தின் போது துப்பாக்கி குண்டுகள் கொண்டு செல்ல அனுமதி இல்லாத நிலையில் இவர் வைத்திருந்தது குறித்து விசாரித்தனர். தவறுதலாக கொண்டு வந்ததாக கூறியதையடுத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement