Advertisement

கழிவுநீர் தொட்டியில் 3 நாட்கள் தவித்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட் புணரமைக்கும் பணிக்காக இடிக்கப்பட்டது. அங்கிருந்த கழிவறையை இடித்துவிட்டு கழிவு நீர் தொட்டியை அகற்றவில்லை. மூடிகள் சேதமடைந்து கிடந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தொட்டி அருகே நின்ற கன்றுக்குட்டி தவறி விழுந்தது. ஆள் நடமாட்டம் இல்லாததால் கன்றுக்குட்டி விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. இன்று வேலை பார்த்தவர்கள் கன்றுக்குட்டியின் குரல் கேட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் கழிவு நீர் தொட்டியை உடைத்து கன்றுக்குட்டியை பத்திரமாக மீட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement