Advertisement

அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை பொள்ளாச்சி வியாபாரிகள் அதிர்ச்சி

பொள்ளாச்சி N. சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பால கோபாலபுரம் வீதி RP டவர்ஸ் என்ற வணிக வளாகத்தில் ஜெராக்ஸ் கடை வைத்துளள்ளார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார் உள்ளே சென்று பார்த்தபோது ரூ 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. அடுத்து உள்ள சகாயராஜ் என்பவரின் கடையின் பூட்டை உடைத்து கடையில் இந்த ரூ. 4000 திருடி சென்றுள்ளனர். அடுத்த தெருவில் ஒரு பாத்திர கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடை உரிமையாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement