Advertisement

ராணுவ வீரர் மீது பெண் புகார்

திருப்பூர் மாவட்டம், முருகம்பாளையத்தைச் சேர்ந்த, இரண்டு வயது பெண் குழந்தையின் தாய் தனலட்சுமி, தன்னை ஏமாற்றிய ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் வினீத்திடம் மனு அளித்தார். தனலட்சுமி கூறுகையில், எனக்கு திருமணமாகி 3 ஆண்டு ஆகிறது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்கிறேன். தேனியை சேர்ந்த என் அத்தை மகனும் ராணுவ வீரருமான வெங்கடேஷன், 25, என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பழகினார். திருமணம் செய்துகொள்ள கூறியதற்கு, வெங்கடேஷ் மற்றும் அவரது பெற்றோர், என்னை மிரட்டுகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement