Advertisement

தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து ! கார் ஓட்டி வந்த பொறியாளர் பலி !

சென்னை, ஆவடி, வசந்தம் நகரை சேர்ந்தவர் நரேந்திரன் வயது 30. கந்தன்சாவடியில் தனியார் கம்பெனியில் இன்ஜினியராக உள்ளார். மனைவி ஜனனி மற்றும் 9 மாத குழந்தை உள்ளது. சொந்த ஊரான அரக்கோணத்திற்கு சென்று விட்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலை விவேகானந்தர் நகரில் கார் தடுப்பு சுவரில் மோதியது. இதில் கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தலையில் பலத்த காயம் அடைந்த நரேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனை அனுப்பிவிட்டனர். மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆவடி போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement